உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / லியோசெல் பருத்திக்கு உலகளாவிய வரவேற்பு இயற்கையில் கிடைக்கும் செயற்கை நுாலிழை

லியோசெல் பருத்திக்கு உலகளாவிய வரவேற்பு இயற்கையில் கிடைக்கும் செயற்கை நுாலிழை

திருப்பூர்: 'லியோசெல்' பருத்திக்கு, பலத்த வரவேற்பு கிடைத்து வருவதால், அவ்வகை செயற்கை பருத்தி, நுாலிழை மற்றும் துணி உற்பத்தி திறனை இந்தியா மேம்படுத்த வேண்டுமென, இளம் தொழில்முனைவோர் எதிர்பார்க்கின்றனர். உலக அளவிலான, 'லியோசெல்' நுாலிழை உற்பத்தியில், சீனா, 80 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. இந்தியாவில், இவ்வகை மூலப்பொருள் உற்பத்தியை மேம்படுத்த வேண்டுமென, இளம் தொழில்முனைவோர் எதிர்பார்க்கின்றனர். உற்பத்தி பற்றாக்குறை இதுகுறித்து சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட துணை தலைவர் சுனில்குமார் கூறியதாவது: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில், 'லியோசெல்' ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்தியாவில், இது போதிய அளவு உற்பத்தி இல்லை. நம் வர்த்தகர்கள் எதிர்பார்ப்பதால், தேவைக்காக, 'லியோசெல்' துணியை, சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. உள்ளாடை, டி - சர்ட், துண்டு போன்றவை, இவ்வகை துணியில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவில், 'லியோசெல்' பருத்தி எனப்படும் மூலப்பொருள், ஆண்டுக்கு, 40,000 டன் உற்பத்தியாகிறது. இது, சீனாவில், 20 லட்சம் டன்னுக்கும் அதிகமாக உற்பத்தியாகிறது; முன் னோடியாகவும் இருக்கிறது. ஊக்குவிக்க வேண்டும் மூலப்பொருள் பற்றாக்குறையால் துணியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. அதன் வாயிலாக, நிலையான வளர்ச்சி கிடைக்காது. வளர்ந்த நாடுகள் எதிர்பார்ப்பது போல், நீடித்த நிலையான வளர்ச்சி நிலையை எட்ட, 'லியோசெல்' பருத்தி நுாலிழை உற்பத்தியை ஊக்குவிக்க, இந்தியாவில் சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன நுாலிழை இது

'லியோசெல்' பருத்தி என்று கூறப்படுவது, தனித்துவமான இழை கிடையாது. மரக்கூழிலிருந்து உருவாக்கப்படும் செயற்கையான பருத்தி போன்ற மூலப்பொருள். குறிப்பாக, 'யூகலிப்டஸ், பீச் ஸ்ப்ரூஸ்' போன் ற மரங்களில் இருந்து, இவ்வகை பொருள் தயாரிக்கப்படுகிறது. பருத்தி ஆடையை காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக, வெளிநாடுகள் இதனை வரவேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ