மக்காச்சோளம் உற்பத்தி 17% குறையும்
புதுடில்லி: கர்நாடகா மற்றும் மஹா.,வில் மக்காச்சோளம் விதைப்பு குறைந்துள்ளதால், அதன் உற்பத்தி 232 லட்சம் டன்னாக இருக்கும் எனவும், இது கடந்தாண்டை விட 16.75 சதவீதம் குறைவு எனவும், கால்நடை தீவன உற்பத்தியாளர்கள் சங்கம் கணித்துள்ளது. கால்நடைகளுக்கான தீவன தயா ரிப்பில் மக்காச்சோளம், சோயா முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. காரீப் பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு 9 சதவீதம் குறைந்து, 89 லட்சம் ஹெக்டேராக உள்ளது. சோயா உற்பத்தி நடப்பாண்டு 124 டன்னாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, 3.52 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.