சென்னையில் கடல்சார் தொழில்நுட்ப மாநாடு
உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு 15 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் நாளை துவங்கி, வரும் ஆறாம் தேதி வரை நடக்கிறது.இந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள், தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள மாற்றங்கள், புவிசார் இயக்கவியல் மற்றும் கடல்சார் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.உலக நாடுகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேச உள்ளனர்.