உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்

பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் அலுவலகம் மூடல்

இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம், பாகிஸ்தானில் தன் அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக மூடியுள்ளது.பாகிஸ்தானில் கடந்த 26 ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவைப் போல அல்லாமல், பாகிஸ்தானில் பொறியியல் பணிகளுக்கான மையத்தை மைக்ரோசாப்ட் அமைக்கவில்லை. அதை உள்நாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து வந்தன. அசூர் மற்றும் ஆபிஸ் மென்பொருள் விற்பனையில் மட்டுமே மைக்ரோசாப்ட் ஈடுபட்ட நிலையில், அதன் விற்பனை குறைந்ததால், கடைசியாக அலுவலகத்தில் ஐந்து பேர் மட்டுமே பணியாற்றினர்.தற்போது பாகிஸ்தான் அலுவலகத்தை மூடி, நேரடி வணிகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி