உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 2 டெஸ்லா கார் மாடல்களுக்கு தகுதி சான்று பெற மஸ்க் தீவிரம்

2 டெஸ்லா கார் மாடல்களுக்கு தகுதி சான்று பெற மஸ்க் தீவிரம்

புதுடில்லி:உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட வாகன நிறுவனமான 'டெஸ்லா' அதன் 'மாடல் ஒய்' மற்றும் 'மாடல் 3' ஆகிய இரு மின்சார கார்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளது.பொதுவாக, டெஸ்லா கார்கள் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன. அதனால், இந்திய சூழலுக்கு தகுதியான கார் என்பதை உறுதிசெய்ய, இந்திய வாகன விதிமுறைகளின்படி, கார் சோதனை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல பிரிவுகளில் சோதனைகளை மேற்கொண்டு தகுதிச் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்.அமெரிக்காவின் வரிப்போர், போட்டியாளர்கள் அதிகரிப்பு, எலான் மஸ்க்கின் அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றால், சீனா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல நாடுகளில் டெஸ்லா கார்கள் விற்பனை சரிந்து வருகிறது. அமெரிக்கா, இந்தியா இடையே வரி இல்லாத ஒப்பந்தம் தொடர்பான பேச்சு முடிவுக்கு வந்தால், இறக்குமதி வரி குறையும் வாய்ப்பு உள்ளது. இதனால், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், உலகின் மூன்றாம் வாகன சந்தையான இந்தியாவை குறிவைத்துள்ளார்.டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் ஆலை அமைத்து, கார்களை தயாரித்து விற்பனை செய்வதை மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், முதற்கட்டமாக இறக்குமதி முறையில் கார்களை விற்பனை செய்ய எலான் மஸ்க் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்திய மின்சார கார் சந்தை, 2024ல் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. முதல் முறையாக, ஒரே ஆண்டில் 1 லட்சம் மின்சார கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சொகுசு மின்சார கார் சந்தை, 6.68 சதவீதம் வளர்ச்சி பெற்று, 2,809 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிக்கைபடி, இந்தியாவில் மின்சார கார் சந்தை வரும் காலத்தில், ஆண்டுக்கு 43 சதவீத வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி