மேலும் செய்திகள்
இளம் இந்தியர்கள் எதிர்கொள்ளும் கடன் சிக்கல்!
05-May-2025
டிஜிட்டல் கடன் சேவை பரப்பை சீரமைக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல்கள் எனும் இந்த நெறிமுறைகள், கடன் சேவை செயல்முறைகளை மேலும் வெளிப்படையாக்கும் தன்மையை உருவாக்குவது,, கடன் பெறுபவர்கள் நலன் காப்பது ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது. நிதிநுட்ப துறையில் புதுமையாக்கம் மற்றும் புதிய சேவைகளை வரவேற்றாலும், டிஜிட்டல் கடன் சேவைகள் வடிவமைப்பு, வழங்கல் தொடர்பாக எழுந்துள்ள சில கவலைகளை கருத்தில் கொண்டு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடன் சேவை:
புதிய நெறிமுறைகள், ஏற்கனவே வெளியிடப்பட்ட கடன் சேவை வெளிப்படைத்தன்மை தொடர்பான விதிமுறைகளை கொண்டுள்ளது. வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் மற்றும் கடன் சேவை நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் இதில் அடங்கியுள்ளன. கடன் சேவை நிறுவன செயல்பாடுகளுக்கு, தொடர்பு உடைய வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.செயலிகள் பதிவேடு:
டிஜிட்டல் கடன் சேவைகளை பட்டியலிடுவதற்கான பதிவேடும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் வங்கிகள் உள்ளிட்ட நிதி அமைப்புகள் தங்கள் கடன் சேவை செயலிகளை இதில் பதிவு செய்ய வேண்டும். ஜூன் 15ம் தேதிக்குள் இதற்கான முதற்கட்ட சமர்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.பொது பட்டியல்:
டிஜிட்டல் கடன் செயலிகளின் பட்டியலை பொது பார்வைக்கு ஜூலை -1ம் தேதி வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. செயலியின் அங்கீகரிக்கப்பட்ட தன்மையை பயனாளிகள் தெரிந்துகொள்ள இந்த பட்டியல் உதவும். எனினும், இதில் உள்ள தரவுகளுக்கு அவற்றை அளிக்கும் நிறுவனங்களே பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் ஒப்பீடு:
பல்வேறு நிறுவனங்களின் கடன் வாய்ப்புகளை வழங்கும் சேவையாளர்கள், அவற்றுக்கான ஒப்பீடுவசதியையும் அளிக்க வேண்டும். கடன் செயலிகளின் அங்கீகார தன்மையையும் குறிப்பிட வேண்டும். பயனாளிகள், கடன் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொண்டு முடிவெடுக்க இது உதவும்.தரவு பாதுகாப்பு:
டிஜிட்டல் கடன் வசதி அதிகரித்துள்ள நிலையில், மோசடி செயலிகள் தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் புதிய நெறிமுறைகள், டிஜிட்டல் கடன் செயலிகளின் தன்மையை பயனாளிகள்சரிபார்த்துக் கொள்ள வழிசெய்யும் வகையில்அமைகின்றன.
05-May-2025