உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  யு.பி.ஐ.,க்கு கட்டணம் கூடாது: பிரதமருக்கு வணிகர்கள் கடிதம்

 யு.பி.ஐ.,க்கு கட்டணம் கூடாது: பிரதமருக்கு வணிகர்கள் கடிதம்

சென்னை: யு.பி.ஐ., எனும் 'டிஜிட்டல்' வழி பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரி, பிரதமர் மோடிக்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து, சங்க தலைவர் வேல்சங்கர், ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது: வணிகம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இளைய தலைமுறை யினர், அனை த்து பரிவர்த்தனைகளையும் முறையாக கணக்கு வழக்குகளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர். தற்போது, 'நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, யு.பி.ஐ., வழி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனை தொகையில், 0.4 சதவீத கட்டணத்தை, பணம் பெறும் வணிகர் செலுத்த வேண்டும். ஏற்கனவே, பல வரிகள், கட்டணங்களை செலுத்தி வரும் வணிகர்களுக்கு, யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிப்பது, கூடுதல் தண்டனையாக அமைகிறது. எனவே, இந்த கட்டணம் குறித்த அறிவிப்பை நிறுத்தி வைக்க கோரி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, 'யு.பி.ஐ., வாயி லாக பரிவர்த்தனை நடத்துவதற்கான கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக வணிகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை