அரிய காந்தம் தேவையில்லை; ஓலா புது முயற்சி
புதுடில்லி; அரிய வகை காந்தங்கள் இல்லாத முதல் மின்சார இருசக்கர வாகன மோட்டாரை உருவாக்கி உள்ளதாக, ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. நடப்பாண்டின் இறுதி காலாண்டில் உற்பத்தி செய்யப்படும் ஓலா ஸ்கூட்டர்களில், இந்த வகையான மோட்டார்கள் பயன்படுத்தப்படும் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரலில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அரிய வகை காந்தங்கள் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில், சீனாவை சார்ந்து இருப்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ஓலா நிறுவனம், அரிய வகை காந்தங்கள் இல்லாத மோட்டாரை உருவாக்க துவங்கியது. தற்போது, இந்த வகையான மோட்டார், உற்பத்திக்கு தயார் நிலையில் இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.