உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / செமிகண்டக்டர் திட்ட நிதியில் 50 சதவீதம் கூட பயன்படுத்தவில்லை

செமிகண்டக்டர் திட்ட நிதியில் 50 சதவீதம் கூட பயன்படுத்தவில்லை

புதுடில்லி:செமிகண்டக்டர் மற்றும் மின்னணு திரை தயாரிப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில், கிட்டத்தட்ட பாதியை பயன்படுத்தாமல் திருப்பி அளித்ததாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பார்லி., நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைக்கான பார்லி., நிலைக் குழுவின் நான்காவது அறிக்கை வெளியாகியுள்ளது. பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2021 - 22 முதல் 2024 - 25 வரை, 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் உட்பட, பல திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முழுமையாகப் பயன்படுத்தாமல், குறைவாகப் பயன்படுத்தியுள்ளது. நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு திரை தயாரிப்புக்கான மாறுதல் செய்யப்பட்ட திட்டத்துக்கு, நடப்பு நிதியாண்டில் 1,503 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 681 கோடி ரூபாய் மட்டுமே அமைச்சகம் பயன்படுத்தியுள்ள நிலையில், 55 சதவீத நிதி பயன்படுத்தப்படவில்லை.ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவீதத்துக்கு மேல் திருப்பி அளிப்பது, அமைச்சகம் சரியாக திட்டமிடாததை காட்டுகிறது. அதற்கான சரியான காரணத்தை பார்லி., நிலைக்குழுவிடம் அமைச்சகம் விளக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !