உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் நத்திங் போன் ஷோரூம்

இந்தியாவில் நத்திங் போன் ஷோரூம்

புதுடில்லி:இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் பிரத்யேக ஷோரூமை திறக்க, 'நத்திங்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நத்திங் நிறுவன இணை நிறுவனர் அகிஸ் எவான்ஜெலிடிஸ் கூறியதாவது: இந்தியாவில் எங்கள் தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. எனவே, இங்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நத்திங் போனின் ஷோரூம் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நத்திங் நிறுவனம் புதிய பிரத்யேக ஷோரூமை திறக்கவுள்ள நிலையில், அதன் துணை பிராண்டான சி.எம்.எப்., தன் சர்வதேச தலைமை அலுவலகத்தை இந்தியாவில் அமைக்க உள்ளது. நத்திங் நிறுவன போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ