உள்ளூர் செய்திகள்

எண்கள்

2,000 பொதுத்துறையைச் சேர்ந்த கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம், 2,000 கோடி ரூபாய்க்கு கூடுதல் மதிப்பில் ஆறு நடுத்தர கப்பல்களை வடிவமைத்து, கட்டி தருவதற்கு ஆர்டர் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐரோப்பாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து இந்த ஆர்டர் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல்கள் அனைத்தும் எல்.என்.ஜி., எனும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவால் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டருக்கான விருப்ப கடிதம், கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்துக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 16.50 கடந்த நிதியாண்டில் அதானி குழுமம் சொத்துகளிலிருந்து ஈட்டிய வருவாய் 16.50 சதவீதம் அதிகரித்துள்ளதாக குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உள்கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்களில் இதுவே அதிகபட்ச வளர்ச்சி என அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் மின்சாரத் துறை வரும் 2032க்குள் 44 லட்சம் கோடி ரூபாயை எட்டக்கூடும் என்றும், இதில் அதானி குழுமம் 20 சதவீதம் பங்கு வகிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை