| ADDED : நவ 14, 2025 12:16 AM
10,306 பி ரபல சரக்கு போக்குவரத்து நிறுவனமான டி.எச்.எல்., குழுமம், 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10,306 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. லைப் சயின்சஸ், மருத்துவம், மாற்று எரிசக்தி, இ--காமர்ஸ், டிஜிட்டல் மயமாக்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்யவுள்ளதாக இந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டோபியாஸ் மேயர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பரந்துபட்ட சந்தை, தொழில்துறைக்கு இணக்கமான கொள்கைகள் நீண்டகால முதலீட்டுக்கான அடித்தளமாக இருப்பதாக டி.எச்.எல்., தெரிவித்துள்ளது. 82,000 ஆ ந்திராவில் பல்வேறு பசுமை மின்சார உற்பத்தி திட்டங்களில், 60,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக ரினியூ எனர்ஜி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. பசுமை அமோனியா, காற்றாலை மற்றும் சோலார், ஹைட்ரோ திட்டங்கள் தொடர்பாக, தனித்தனியே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஏற்கனவே இந்நிறுவனம், கடந்த மே மாதம் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தில் 22,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது. இதனுடன் சேர்த்து, ஆந்திராவில் மட்டும் இந்நிறுவனத்தின் மொத்த முதலீடு 82,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.