உள்ளூர் செய்திகள்

 எண்கள்

12,000 அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீடு செய்துள்ள கிட்டத்தட்ட 800 இந்திய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீடு பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாயை அங்கு முதலீடு செய்து உள்ளன. சில்லரை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறையில் மட்டும் 280 இந்திய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 3,700 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளன. 14,535 கடன் சிக்கலில் சிக்கி தவித்து வரும் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தை, 14,535 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் கையகப்படுத்த, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் வாயிலாக, கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு துறையில் அதானி குழுமத்தின் ஆதிக்கம் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை