ஒரு கேள்வி ஒரு பதில்
கேள்வி: பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிடம் சிறு தொழில்கள் ஆர்டர்கள் பெறுவது எப்படி? பதில்: முதலில் 'உத்யம்' பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் சப்ளையர்களாக பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். அரசு மின்னணு கொள்முதல் தளமான 'ஜெம்' மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியாகும் டெண்டர்களை கண்காணிக்கலாம். தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களுக்கு ஏற்ற டெண்டர்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். தேவையான தரசான்றிதழ்கள், சோதனை அறிக்கைகள், உற்பத்தி திறன் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். டெண்டர் நிபந்தனைகளை நிறைவேற்றி, போட்டியில் தேர்வானால் கொள்முதல் ஆர்டர் கிடைக்கும். - மேஜர் ஜெனரல் அசோக் குமார் (ஓய்வு), முன்னாள் தலைமை இயக்குனர், ஒருங்கிணைந்த போர்முறை ஆய்வு மையம்.