உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஓ.பி., மொபிலிட்டி ரூ.2,700 கோடி முதலீடு

ஓ.பி., மொபிலிட்டி ரூ.2,700 கோடி முதலீடு

புதுடில்லி :வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும், பிரான்சை சேர்ந்த ஓ.பி., மொபிலிட்டி நிறுவனம், இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,700 முதல் 2,700 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், கார்களுக்கான வெளிப்புற உபகரணங்கள், எரிவாயு அமைப்புகள், லைட் அமைப்புகள் உள்ளிட்ட வற்றை தயாரித்து வினியோகிக்கிறது. இந்நிலையில், கிட்டத்தட்ட 2,700 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக தமிழகத்தின் சென்னை, ஹரியானாவின் மனேசர், மஹாராஷ்டிராவின் அவுரங்காபாத், குஜராத்தின் ஹன்சல்பூர், ஹரியானாவின் கார்கோடா ஆகிய பகுதிகளில் புதிய ஆலைகளை அமைக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை