உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பயணியர் கார் விற்பனை 9% சரிந்தது 3 சக்கர வாகனங்கள் அதிகம் விற்றன

பயணியர் கார் விற்பனை 9% சரிந்தது 3 சக்கர வாகனங்கள் அதிகம் விற்றன

புதுடில்லி : ஆகஸ்ட் மாத பயணியர் வாகன விற்பனை மற்றும் உற்பத்தி அறிக்கையை இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் பயணியர் வாகன விற்பனை, 9.68 சதவீதம் உயர்ந்து முன்னேற்றம் கண்டு உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், 20.34 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், நடப்பாண்டு ஆகஸ்ட்டில், 22.31 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. வாகன உற்பத்தியை பொறுத்த வரை, 26.93 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட 8.1 சதவீதம் அதிகம். இதுகுறித்து இந்திய வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜேஷ் மேனன் கூறியதாவது: பயணியர் கார்களின் விற்பனை, 8.80 சதவீதம் குறைந்துள்ளது. டீலர்களுக்கு வினியோகத்தை கார் தயாரிப்பாளர்கள் குறைத்தது, இதற்கு முக்கிய காரணம். மூன்று சக்கர வாகன விற்பனை, ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை காணாத அளவில் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ