பி.எம்., இ டிரைவ் திட்டத்தில் மாற்றம் வாகன பதிவுக்கான காலக்கெடு நீட்டிப்பு
புதுடில்லி:இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் 'பி.எம்., இ டிரைவ்' திட்டத்தில் மத்திய அரசு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு, பெட்ரோலிய எரிபொருள் வினியோக சுமை ஆகியவற்றை குறைக்க 10,900 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசு இத்திட்டத்தை கடந்த 2024ல் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ், 1.50 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட 24,79,120 மின்சார இருசக்கர வாகனங்களுக்கும், 2.50 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட 39,034 மூன்று சக்கர வாகனங்களுக்கும் 15 சதவீதம் வரை மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.