முன்னுரிமை இணைய சேவை மத்திய அரசு அமைப்புகள் ஆய்வு
புதுடில்லி: ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள புதிய முன்னுரிமை இணைய சேவையான 'பிரியாரிட்டி போஸ்ட்பெய்டு' திட்டம் குறித்து, மத்திய அரசு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆய்வு நடத்தி வருகின்றன. 5ஜி 'நெட்வொர்க் ஸ்லைசிங்' தொழில்நுட்பம் வாயிலாக, அதிக இணைய பயன்பாடு உள்ள நேரங்களிலும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சீரான இணைய வேகம் வழங்கும் வகையில், இந்த சேவையை ஏர்டெல் நிறுவனம் கடந்த மே 19-ம் தேதி அறிமுகம் செ ய்தது. ஆனால், அனைத்து இணைய சேவைகளும் மற்றும் செயலிகளும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக கிடைக்க வேண்டும் என கூறும் 'நெட் நியூட்ராலிட்டி' விதிமுறைகளுக்கு இந்த சேவை உட்பட்டதா, மேலும் இதனால் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் இணைய சேவை தரம் பாதிக்கப்படுமா என்பது குறித்து அரசு தரப்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவும் ஏர்டெல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. மேலும் 'நெட்வொர்க் ஸ்லைசிங்' தொடர்பான தனி விதிமுறைகள் இந்தியாவில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ஏர்டெல்' விளக்கம் டிராய் மற்றும் தொலைத்தொடர்பு துறை விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக பயன்பாடு உள்ள நேரங்களிலும் 5ஜி சேவையின் மொத்த பயன்பாடு 38 சதவீதம் மட்டுமே உள்ளது. இதில் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களின் பயன்பாடு 4 சதவீதம் மட்டுமே ஆகும். இதனால், ப்ரீபெய்டு மற்றும் பிற வாடிக்கையாளர்க ளுக்கான சேவையில் போதுமான இணைய திறன் இருப்பதால் அவர்களின் சேவை பாதிக்கப்படாது. 'பிரியாரிட்டி போஸ்ட்பெய்டு' இது, அதிக இணைய பயன்பாடு உள்ள 'பீக் ஹவர்ஸ்' நேரங்களிலும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சீரான 5ஜி இணைய வேகம் வழங்கும் திட்டம். இதற்காக, 5ஜி நெட்வொர்க்கில் தனி இணைய வசதி ஒதுக்கப்படும். இதன் வாயிலாக அதிக பயனாளிகள் உள்ள பகுதிகளிலும் இணைய சேவை தடையின்றி வேகமாக கிடைக்கும் என்கிறது ஏர்டெல்.