உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தனியார் துறை வளர்ச்சி மார்ச்சில் சற்றே குறைவு

தனியார் துறை வளர்ச்சி மார்ச்சில் சற்றே குறைவு

புதுடில்லி; சேவைகள் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்ததன் காரணமாக, இம்மாதம் நாட்டின் தனியார் துறை வளர்ச்சி சற்றே குறைந்துள்ளதாக பி.எம்.ஐ., தரவுகள் தெரிவிக்கின்றன.'எஸ் அண்டு பி., குளோபல்' நிறுவனத்தின் உதவியோடு, எச்.எஸ்.பி.சி., வங்கி ஒவ்வொரு மாதமும் இந்திய தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி குறித்து பி.எம்.ஐ., குறியீடு விபரத்தை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக பிளாஷ் இந்தியா பி.எம்.ஐ., எனும் குறியீட்டையும் வெளியிடுகிறது.இம்மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மார்ச் மாதத்துக்கான கூட்டு பிளாஷ் பி.எம்.ஐ., குறியீடு, 58.60 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதம் 58.80 புள்ளிகளாக இருந்தது. இந்த குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும். இம்மாதம் சேவைகள் துறையைக் காட்டிலும், தயாரிப்பு துறை வலுவாக வளர்ச்சியடைந்துள்ளது. போட்டித்தன்மை அதிகரித்ததன் காரணமாக, சேவைகள் துறையின் வளர்ச்சி வேகம் சற்று குறைந்துள்ளது. தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிகரித்த போதும், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு அறிவிப்பால் வெளிநாட்டு ஆர்டர்கள் சற்று குறைந்தன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ