ஜனா வங்கியின் சர்வதேச வணிகத்திற்கான விண்ணப்பத்தை நிராகரித்தது ஆர்.பி.ஐ.,
மும்பை:சர்வதேச வர்த்தகம் செய்வதற்கான மாற்றத்துக்கு அனுமதி கோரிய ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி திருப்பி அனுப்பியுள்ளது. சிறுநிதி வங்கி பிரிவில் உள்ள ஜனா எஸ்.எப்.பி., அதற்கான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. எந்த குறிப்பிட்ட அளவுகோலை வங்கி பூர்த்தி செய்யவில்லை என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை என்றும் மீண்டும் விண்ணப்பிப்பதா என்பது குறித்து வங்கியின் வாரியம் முடிவு செய்யும் என்றும் வங்கி தரப்பில் கூறப்படுகிறது. முன்னதாக, ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி, சர்வதேச வணிகம் செய்வதற்காக விண்ணப்பித்தபோது, ரிசர்வ் வங்கியின் கொள்கை அளவிலான ஒப்புதலை பெற்றது. இதுதவிர, உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும், யுனிவர்சல் வங்கியாக மாறுவதற்கு ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்துள்ளது. பினோ பேமெண்ட்ஸ் வங்கி ஸ்மால் பைனான்ஸ் வங்கியாக மாற விண்ணப்பித்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில், ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியின் ஒரு பங்கின் விலை 2.48 சதவீதம் சரிந்து 446.15 ரூபாய்க்கு முடிந்தது. ஒப்புதலை பெற... * ஸ்மால் பைனான்ஸ் வங்கியாக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் நிறைவு செய்த பின் யுனிவர்சல் வங்கிக்கு விண்ணப்பிக்கலாம் *அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும் * முந்தைய காலாண்டின் இறுதியில் குறைந்தபட்ச நிகர மதிப்பு 1,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் * கடந்த 2 நிதியாண்டுகளிலும் நிகர லாபம் ஈட்டியிருக்க வேண்டும் * கடந்த 2 நிதியாண்டுகளில் மொத்த மற்றும் நிகர வாராக்கடன் விகிதங்கள் முறையே 3% மற்றும் 1% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.