உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

விழுப்புரம்:கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் மாநில ஆலோசனை கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்தில், பண்ணைகளுக்கு கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். அரசு தரப்பு, கறிக்கோழி நிறுவனங்கள், கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கூட்டத்தை நடத்தி, ஆண்டுதோறும் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தனி நல வாரியம் அமைக்க வேண்டும்.கறிக்கோழி வளர்ப்பிற்கு நிறுவனம் வழங்கும் குஞ்சுகள் எடை குறையாமலும், சான்று அளிக்கப்பட்ட தரமான தீவனத்தையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ