உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  இணையதள வேகம் அதிகரிக்க ரூட் சர்வர் அமைக்க கோரிக்கை

 இணையதள வேகம் அதிகரிக்க ரூட் சர்வர் அமைக்க கோரிக்கை

புதுடில்லி: உலகளாவிய இணைய நிர்வாக அமைப்பான 'ஐகேன்', இந்தியாவில் இணையத்தின் அடிப்படை கட்டமைப்பான 'ரூட்' சர்வரை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்ததாவது: இணைய சேவையின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், நாட்டில் குறைந்தபட்சம் ஒரு ரூட் சர்வராவது அமைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரூட் சர்வர் என்பது இணையத்தின் மைய கட்டமைப்பாகும். இணைய பயனர் ஒருவர் இணையதள முகவரியை தட்டச்சு செய்தாலோ, மின்னஞ்சல் அனுப்பினாலோ, இணையத்தில் தகவல்களை தேடினாலோ அந்த கோரிக்கை முதலில் ரூட் சர்வர்களை சென்றடைகிறது. தற்போது பெரும்பாலான ரூட் சர்வர்கள் அமெரிக்காவில் உள்ளன. அவை இணையதளத்தின் முகவரி, இருப்பிடத்தை கண்டறிந்து, பயனரை அந்த இணையதளத்துடன் இணைக்கின்றன. எனவே, இந்தியாவில் ரூட் சர்வர் அமைக்கப்பட்டால், இணைய சேவையின் வேகம் அதிகரிக்கும். நம்பகத்தன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் மேம்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை