உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ராக்கெட் தயாரிப்பு: எச்.ஏ.எல்., ஒப்பந்தம்

ராக்கெட் தயாரிப்பு: எச்.ஏ.எல்., ஒப்பந்தம்

புதுடில்லி:இஸ்ரோவின் சிறிய செயற்கைக்கோள்களை ஏவ உதவும் ராக்கெட்டுகள் தயாரிப்புக்கான 511 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, எச்.ஏ.எல்., நிறுவனம் பெற்றுள்ளதாக ஐ.என்., ஸ்பேஸ் தெரிவித்துள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் எனப்படும் பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல்., மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிறுவனமாகும். இதன் வாயிலாக ஒரு விண்வெளி நிறுவனம், முழுமையாக ஏவுதள வாகன தொழில்நுட்பத்தை மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றும் முதல் நிகழ்வுகளில் ஒன்றாக இது உருவெடுத்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் எச்.ஏ.எல்., நிறுவனம், ஆறு முதல் எட்டு எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை