உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மே மாதத்தில் ரூபாய் மதிப்பு அதிக வீழ்ச்சி

மே மாதத்தில் ரூபாய் மதிப்பு அதிக வீழ்ச்சி

புதுடில்லி :அமெரிக்காவின் பரஸ்பர வரி தொடர்பான நிச்சயமற்ற தன்மை, பாகிஸ்தான் மீதான போர் உள்ளிட்டவை காரணமாக, கடந்த மே மாதம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 1.27 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. ஆசிய கரன்சிகளில் ரூபாய் மதிப்பு மோசமான சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, கடந்த மே மாத துவக்கத்தில் 84.48 ரூபாயாக இருந்த நிலையில், மே 30ல் 85.57 ரூபாயாக உயர்ந்து மதிப்பை இழந்து உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைந்தது, வளர்ச்சி காரணிகள் ஆகியவை, ரூபாய் மதிப்புக்கு ஆதரவளித்த போதிலும், உலகளாவிய பொருளாதார காரணிகள் மேலும் பலவீனமடைந்தது, ரூபாய் மதிப்பை பதம் பார்த்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை