உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில் பூங்காவை மேம்படுத்த தனி பிரிவை துவக்கும் சிப்காட்

தொழில் பூங்காவை மேம்படுத்த தனி பிரிவை துவக்கும் சிப்காட்

சென்னை :தமிழகத்தில் அனைத்து தொழில் பூங்காக்களின் தோற்றப்பொலிவையும் உலக தரத்திற்கு மேம்படுத்த தனி பிரிவை, 'சிப்காட்' நிறுவனம் துவக்க உள்ளது. தமிழகத்தில் தற்போது, 24 மாவட்டங்களில், 48,926 ஏக்கரில் எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கி, 50 தொழில் பூங்காக்களை சிப்காட் உருவாக்கியுள்ளது. அவற்றில், 3,390 நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழில் பூங்காக்களின் தோற்றப்பொலிவை மேம்படுத்த சிப்காட் அலுவலகத்தில் சிறப்பு பிரிவு உருவாக்குவதற்கு அரசிடம் அனுமதி கோரும் பணியில் சிப்காட் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அனுமதி கிடைத்ததும் கட்டட கலை நிபுணர், இயற்கை வன நிபுணர் போன்றவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள், அனைத்து தொழில் பூங்காக்களிலும் ஆய்வு செய்து, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை தருவர். அதற்கு ஏற்ப, பணிகள் மேற்கொள்ளப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை