சிறிய எக்ஸ்கவேட்டர்; அதிக வசதி
'கோமட்சு' மற்றும் எல் அண்டு டி., நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து, 'பி.சி., - 35 எம்.ஆர்3' என்ற புதிய சிறிய ஹைட்ராலிக் எக்ஸ்கவேட்டரை அறிமுகப்படுத்தி, 11 கட்டுமான இயந்திரங்களை காட்சிப்படுத்தி உள்ளன. இதில், லோடர்கள், ரோடு ரோலர்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.இந்தியாவில் எல் அண்டு டி., கட்டுமான மற்றும் சுரங்க இயந்திர நிறுவனம், 80 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. எக்ஸ்கவேட்டர், மோட்டார் கிரேடர், புல்டோசர், கிரஷர், சுரங்க லாரி உள்ளிட்ட இயந்திரங்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது. கட்டுமான இயந்திர நிறுவனங்களில் உலக அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஜப்பானின் கோமட்சு நிறுவனத்துடன் 1998ம் ஆண்டில் இணைந்தது.பயன்பாடு: குறுகிய இடங்களில் குழி தோண்டுவது, இடிக்கும் மற்றும் பாறைகள் உடைக்கும் பணிகள், மணல், கற்கள் மற்றும் கட்டட இடர்பாடுகளை அப்புறப்படுத்துவது, விவசாய பணிகள் உள்ளிட்டவற்றுக்கானது. சிறப்பம்சம்: • குறைந்த எரிபொருள் செலவில் வேகமாக இயங்கும். • காற்று மாசுபாடு மற்றும் இரைச்சல் குறைக்கப்பட்டுள்ளது. • பணியாளருக்கு ஏ.சி., கேபின் வழங்கப்பட்டுள்ளது.
செயல்பாட்டு எடை : 3,675 கிலோ
இன்ஜின் : 1.6 லிட்டர், 3 சிலிண்டர், வாட்டர் கூல்டு டீசல் இன்ஜின்பவர் : 23 ஹெச்.பி.,பக்கெட் திறன் : 0.30 கியுபிக் மீட்டர்
நகரமயமாக்கல் மற்றும் நாட்டின் கட்டுமான வளர்ச்சி அதிகரிப்பால், இது போன்ற இயந்திரங்களின் தேவை உயர்ந்துள்ளது. வாகன செயல்பாட்டு திறன் மற்றும் நிலையான வளர்ச்சி தரும் புதுமையான தீர்வுகளை வழங்கும் எங்கள் நிறுவன இலக்கை, இந்த சிறிய எக்ஸ்கவேட்டர் பூர்த்தி செய்யும்.
- அரவிந்த் கார்க்எல் அண்ட் டீ நிறுவன மூத்த துணைத் தலைவர்