உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோவையில் புத்தொழில் மாநாடு ஸ்டார்ட்அப் இந்தியா பங்கேற்பு

கோவையில் புத்தொழில் மாநாடு ஸ்டார்ட்அப் இந்தியா பங்கேற்பு

தமிழகத்தை சேர்ந்த, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு, பல்வேறு நாடுகளில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உடன் தொடர்பை ஏற்படுத்த, உலக ஸ்டார்ட் அப் மாநாட்டை, கோவை கொடிசியாவில் வரும் அக்., 9, 10ல் தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் நடத்துகிறது. இந்த மாநாட்டில் இணைந்து செயல்பட உள்ளதாக, மத்திய அரசின், 'ஸ்டார்ட்அப் இந்தியா' தெரிவித்துள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா அதிகாரிகள், மாநாட்டில் பங்கேற்று, மத்திய அரசின் நிதியுதவி உள்ளிட்ட ஊக்குவிப்பு சலுகைகள், கொள்கைகள் தொடர்பான விபரங்களை விரிவாக தெரிவிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி