உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 30 ஆண்டுக்கு பின் டி.என்.பி.எல்.,லில் வாரிசு வேலை

30 ஆண்டுக்கு பின் டி.என்.பி.எல்.,லில் வாரிசு வேலை

சென்னை:தமிழக அரசின் டி.என்.பி.எல்., எனப்படும் தமிழக செய்தித்தாள் காகித நிறுவனம், அச்சு மற்றும் எழுது காகிதம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள், கரூர் மாவட்டம், புகளூரிலும்; திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டியிலும் உள்ளன.இந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், குடும்பத்தினருக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது. பின்னர், 1995ல் நிறுத்தப்பட்டது. தற்போது, 30 ஆண்டுகளுக்குப் பின், டி.என்.பி.எல்., நிறுவனத்தில் பணிபுரிந்து உயிரிழந்த ஏழு வாரிசுதாரர்களுக்கு, பணி நியமன ஆணைகளை, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராஜா வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ