உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அடுத்த சீசனில் சர்க்கரை உற்பத்தி 3.10 கோடி டன்னாக இருக்கும்

அடுத்த சீசனில் சர்க்கரை உற்பத்தி 3.10 கோடி டன்னாக இருக்கும்

புதுடில்லி:'நாட்டின் நிகர சர்க்கரை உற்பத்தி, வரும் அக்டோபரில் துவங்கும் 2025--26ம் ஆண்டுக்கான பருவத்தில், 3.10 கோடி டன்னாக இருக்கும்' என தொழில்துறையினர் கணித்துள்ளனர். தொழில்துறையினர் தெரிவித்துள்ளதாவது: வரும் 2025--26ம் ஆண்டுக்கான சீசனில், மொத்தம் உற்பத்தி செய்யப்படும் 3.60 கோடி டன் சர்க்கரையில், 50 லட்சம் டன் சுக்ரோஸ், எத்தனால் தயாரிப்புக்கு மாற்றி விடப்படும். அரசு 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதிக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளது. இதன்படி, அடுத்த பருவத்தில், 60 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருக்கும். இது நடப்பு சீசனில் எதிர்பார்க்கப்படும் 45 லட்சம் டன் கையிருப்பை விட அதிகமாக இருக்கும். நடப்பு 2024--25ம் ஆண்டுக்கான சீசன், வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதில், சர்க்கரை நுகர்வு 2.88 கோடி டன்களாக இருக்கும்பட்சத்தில், 45 லட்சம் டன் சர்க்கரை கையிருப்பில் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை