உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சுசூகி மின் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது

சுசூகி மின் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது

புதுடில்லி:சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், ஹரியானாவின் குர்கானில் உள்ள ஆலையில், அதன் முதல் மின்சார ஸ்கூட்டரான 'இ - அக்செஸ்' உற்பத்தியை துவங்கிஉள்ளது. இது, 'ஏதர் ரிஸ்டா, பஜாஜ் சேடக், டி.வி.எஸ்., ஐக்யூப், ஓலா எஸ்1' உள்ளிட்ட மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. லித்தியம் இரும்பு பாஸ்பேட் பேட்டரியை உள்ளடக்கிய மின் தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட வெப்பநிலைத் தன்மை, அதிர்வு, நீரில் மூழ்குதல், தீவிர வெப்பநிலை மதிப்பீடுகள் உள்ளிட்ட கடுமையான சோதனைகளுக்கு பேட்டரிகள் உட்படுத்தப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக விரிவடைந்து வரும் மின்சார இருசக்கர வாகன பிரிவில், சுசூகியின் நுழைவாக இது அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ