உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஜவுளி துறை நிறுவனங்களில் கார்பன் உமிழ்வு குறைக்க இலக்கு

ஜவுளி துறை நிறுவனங்களில் கார்பன் உமிழ்வு குறைக்க இலக்கு

புதுடில்லி:ஜவுளி மற்றும் பொதுத்துறை, தனியார் துறை எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் ஆகியோர், கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான இலக்கை நிர்ணயித்து, மத்திய அரசு வரைவு முன்வடிவை தயார் செய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் படி, வரும் 2030ம் ஆண்டுக்குள், பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை இந்தியா 45 சதவீதம் குறைக்க வேண்டும். இந்த நோக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஜவுளித் தொழில் துறையினர் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான வழிமுறைகளை தயார் செய்துள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகம், ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வரைவு முன்வடிவை வெளியிட்டது.ஆனால், அதில் அலுமினியம், சிமென்ட், குளோரின் மற்றும் காகிதத் துறை நிறுவனங்கள் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருந்தன. தற்போது பெட்ரோலியம் மற்றும் ஜவுளித் தொழில்களும் சேர்க்கப்பட்டு உள்ளன. கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட இந்த வரைவு முன்வடிவின் மீது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுவதாகவும், அடுத்த 4 மாதங்களுக்குள் இறுதி செய்யப்பட்ட அறிவிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைக்க உத்தரவு

அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், ஒரு டன் எரிபொருள் உற்பத்தி செய்ய 7.78 டன் கார்பனை வெளியேற்றியது. இந்நிலையில், வரைவு முன்வடிவின்படி, வரும் 2026 - 27 நிதியாண்டுக்குள், கார்பன் உமிழ்வை 7.03 டன்னாக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியத்தின் சுத்திகரிப்பு நிலையம், கார்பன் உமிழ்வை 3.97 டன்னிலிருந்து 3.80 டன்னாக குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ