செயற்கை இழை துணி இறக்குமதிக்கு கட்டணம்
புதுடில்லி: செயற்கை பின்னலாடைத் துணிகளுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இனி இந்த வகை துணிகளை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் கிலோ ஒன்றுக்கு 3.50 அமெரிக்க டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 308 ரூபாய் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். எனினும், இந்த விதிமுறைகளில் இருந்து குறிப்பிட்ட சில வர்த்தகர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்காக இறக்குமதி செய்வோர், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த ஆலைகளில் இயங்கும் நிறுவனங்கள் இந்த கட்டணத்தை செலுத்த வேண்டாம். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் துணிகள் உள்நாட்டு சந்தையில் விற்கப்படக்கூடாது. மேலும், 1 சதுர மீட்டருக்கு 28 முதல் 48 கிராம் எடை கொண்ட துணிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வகை துணிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என்றும், உடனடியாக அமலுக்கு வருவதாகவும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.