உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பிரைட் டைகரில் டாடா மோட்டார்ஸ் ரூ.120 கோடி முதலீடு

பிரைட் டைகரில் டாடா மோட்டார்ஸ் ரூ.120 கோடி முதலீடு

மும்பை : டிஜிட்டல் தளவாட தீர்வுகளை வழங்கும், 'பிரைட் டைகர்' என்ற நிறுவனம், நிதி திரட்டல் மூன்றாம் சுற்றில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 120 கோடி ரூபாய் முதலீடு பெற்றுள்ளது.இந்நிறுவனத்தில், 42 முதல் 46 சதவீதம் வரை பங்கு வைத்துள்ள டாடா நிறுவனம், மொத்தம் 270 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது. டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் தளவாட திறன்களை மேம்படுத்த இந்த முதலீடு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், டாடா நிறுவனத்தின் டிஜிட்டல் தளவாட கட்டமைப்புகளை மேம்படுத்த, செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டிற்குள் இது செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ