உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  கரூரில் டெக்ஸ்டெக் ஷோ வரும் 28ம் தேதி துவக்கம்

 கரூரில் டெக்ஸ்டெக் ஷோ வரும் 28ம் தேதி துவக்கம்

திருப்பூர்: வீட்டு உபயோக ஜவுளி தயாரிப்பாளர் மற்றும் ஏற்றுமதியாளருக்கான, அதிநவீன இயந்திரங்கள் அணிவகுக்கும், 'டெக்ஸ்டெக் ஷோ' கண்காட்சி, கரூரில் வரும் 28ம் தேதி துவங்குகிறது. திரைச்சீலைகள், குளியல் துண்டுகள் உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி, பிரின்டிங் உள்ளிட்ட 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் என, ஒவ்வொரு பிரிவிலும், புதிய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் அதிநவீன இயந்திரங்களுடன், கரூரில் 'டெக்ஸ்டெக் ஷோ' கண்காட்சி, இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2zk5wpfo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், சீனா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த முன்னணி இயந்திர வடிவமைப்பு நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. தையல், பிரின்டிங், கட்டிங், பினிஷிங், டிஜிட்டல் பியூஷிங், எம்ப்ராய்டரி இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மெத்தை மற்றும் படுக்கை விரிப்புகள் தயாரிக்க பயன்படுத்தப்படும், 'க்வில்டிங்' தொழில்நுட்ப தையல் இயந்திரங்களும் காட்சிப்படுத்தப்படும். ஐரோப்பா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அமெரிக்காவுடன் உருவாகும் ஒப்பந்தம் காரணமாக, ஜவுளித்துறைக்கான வர்த்தக வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பு மேம்பாட்டுக் காக, அதிநவீன இயந்திரங் களை நிறுவ, ஏற்றுமதியாளர் களும் தயாராகி விட்டனர். ஜவுளித்தொழில் அடுத் தக் கட்ட வளர்ச்சியை நோக்கி நகர, கரூரில் நடக்கும் 'டெக்ஸ்டெக் ஷோ' கண் காட்சி கைகொடுக்குமென, கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கரூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த, உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் 3,000க்கும் அதிகமானோர் கண்காட்சிக்கு முன்பதிவு செய்துள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி