உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கோவையில் நகை தொழில் பூங்காவுக்கு டெண்டர்

கோவையில் நகை தொழில் பூங்காவுக்கு டெண்டர்

சென்னை:தங்க நகை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பயன்பெற, கோவை மாவட்டம், குறிச்சி தொழிற்பேட்டையில், 45 கோடி ரூபாயில் தங்க நகை தொழில் பூங்கா கட்டுவதற்கு, 'சிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது. தமிழகத்தில் தங்க நகைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், கோவை மாவட்டத்தில் அதிகம் உள்ளன. அம்மாவட்டத்தில் மட்டும், 20,000க்கும் மேற்பட்ட நகை பட்டறைகளில், ஒரு லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த பட்டறைகள், போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன. எனவே, அந்நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, கோவையில் உள்ள குறிச்சி தொழிற்பேட்டையில், 126 கோடி ரூபாயில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை