மேலும் செய்திகள்
சிறுதொழில்களையும் உள்ளடக்கியதே வளர்ச்சி
08-Nov-2026
தோல் ரசாயன தயாரிப்பை சோதித்து பார்க்கலாம் எதற்காக? தோல் பதனிடும் பணிகளில் பயன்படுத்தப்படும் புதிய ரசாயனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை, வணிக உற்பத்திக்கு செல்லும் முன் சோதித்து பார்க்க சென்னை சி.எஸ்.ஐ.ஆர்., – மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ‘பைலட் பிளான்ட்’ வசதியை வழங்குகிறது. யாருக்கு பயன்? தோல் ரசாயன தயாரிப்பில் ஈடுபடும் சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோர். என்ன செய்யலாம்? புதிய ரசாயன கலவையின் செயல்திறன், தயாரிப்பு முறை மற்றும் பயன்பாட்டு சாத்தியத்தை சிறிய அளவில் சோதித்து பார்க்கலாம். தொழில் பயன் முழு அளவிலான உற்பத்தி வசதியில் முன்கூட்டியே பெரிய முதலீடு செய்யாமல், தயாரிப்பு நடைமுறைக்கு ஏற்றதா என்பதை மதிப்பிட இந்த வசதி உதவும். வசதி: சி.எஸ்.ஐ.ஆர்., – சி.எல்.ஆர்.ஐ., சென்னை
08-Nov-2026