உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஏ-டப் திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பிக்க பிரத்யேக வசதி ஜவுளித்துறை கமிஷனரகம் அறிவிப்பு

 ஏ-டப் திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பிக்க பிரத்யேக வசதி ஜவுளித்துறை கமிஷனரகம் அறிவிப்பு

திருப்பூர்: 'ஏ-டப்' திட்டம் தொடர்பான கோரிக்கை மற்றும் மேல்முறையீடுகளை, 'ஐ -டப்ஸ்' என்ற போர்ட்டல் வாயிலாக, 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என, மத்திய ஜவுளித்துறை கமிஷனரகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு, ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மானியம் வழங்கி ஊக்குவித்தது. அதிநவீன மெஷின்கள் இறக்குமதி செய்ய, 20 சதவீதம் வரை மானியம் வழங்கும் 'டப்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்பின், விதிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டு, 'ஏ-டப்' என்ற பெயரில் அமலில் இருந்தது; கடந்த, 2022 மார்ச்சில் அந்த திட்டம் முடிவடைந்தது. இத்திட்டத்தை மேலும் ஐந்தாண்டு நீட்டிக்க வேண்டுமென, தொழில்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். திட்டம் அமலில் இருந்த காலத்தில் இயந்திரங்கள் இறக்குமதி செய்தவர்கள், மானியம் பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தங்களது கோரிக்கையை, நேரடியாக, கடிதம் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், 'ஏ- டப்' திட்டம் குறித்த மேல்முறையீடு மற்றும் கோரிக்கையை பதிவு செய்ய, 'ஐ -டப்ஸ்' என்ற பிரத்யேக 'போர்ட்டல்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கை மற்றும் மேல்முறையீடுகளை, இதன் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து, தீர்வு பெறலாம் என்றும், ஜவுளித்துறை கமிஷனரக அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறுகையில்,''ஐ -டப்ஸ்' இணையதளம் வாயிலாக மட்டுமே, 'ஏ-டப்' திட்ட கோரிக்கை மற்றும் புகார்களை பதிவு செய்யலாம். மற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாது என, கமிஷனரகம் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜவுளி துறையினர், வரும் 2026 ஜனவரி 22 வரை, கோரிக்கைகள், மேல்முறையீடுகளை 'ஐ -டப்ஸ்' போர்ட்டலில் பதிவு செய்யலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி