பொருளாதார வளர்ச்சி பாதை திருப்தி தருகிறது
வர்த்தக பதட்டங்கள், புவி அரசியல் நிச்சயமற்ற நிலை, அதிக வரி விதிப்புகள் உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகளை, நம் நாட்டின் பொருளாதாரம் திருப்திகரமாக எதிர்கொண்டிருக்கிறது. எனவே, நடப்பு நிதியாண்டின் ஜி.டி.பி., வளர்ச்சி 7 சதவீதத்தை தொடும் என்ற நம்பிக்கை உள்ளது. அண்மையில் சர்வதேச தர நிர்ணய அமைப்புகள், ஐ.எம்.எப்., போன்றவை நம் நாட்டின் வளர்ச்சிக்கான கணிப்பை உயர்த்தியதே இதற்கு சான்று. நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பாதுகாப்பான நிலையில் வைத்துள்ளன. -ஆனந்த நாகேஸ்வரன் தலைமை பொருளாதார ஆலோசகர்