உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

100

இந்திய ஸ்டீல் உற்பத்தியின் வலுவான வளர்ச்சி காரணமாக, நாட்டின் தனிநபர் ஸ்டீல் நுகர்வு தற்போது 100 கிலோவை எட்டியுள்ளதாக மத்திய ஸ்டீல் துறையின் செயலர் சந்தீப் பவுண்ட்ரிக் தெரிவித்துள்ளார். கடந்த 2017ல், தேசிய ஸ்டீல் கொள்கை துவங்கப்பட்ட போது, தனிநபர் நுகர்வு 60 கிலோவாக மட்டுமே இருந்தது.

3,200

அமெரிக்காவின் தேசிய கடன் 3,200 லட்சம் கோடி ரூபாயை விரைவாக எட்டி சாதனை படைத்துள்ளது. கடந்த 2020 ஜனவரியில் வெளியிடப்பட்ட கணிப்புகளின்படி, 2030ம் ஆண்டுக்கு பின்தான் இத்தொகையை எட்டும் என அந்நாட்டு பார்லிமென்ட் பட்ஜெட் அலுவலகம் கணித்திருந்த நிலையில், முன்னதாகவே இம்மைல்கல்லை எட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !