இதுதான் இப்ப டிரெண்ட்! விஐபிகள் விரும்பும் எலைட் மேட்ரிமொனி, உங்கள் விவரங்கள் எதுவும் தேவையில்லாமல் வெளியே போகாது!
ஒருவரின் பயோ டேட்டா இருந்தால் போதுமா? மாப்பிள்ளை, மணப்பெண்ணை தேர்ந்தெடுத்து விடலாமா? அட அந்த காலம் எல்லாம் முடிந்து விட்டது. பயோடேட்டாவை தாண்டி குடும்பங்களை இணைக்கும் விஷயங்களே இப்போது திருமணத்தை தீர்மானம் செய்கின்றன.
வரன் தேடுவதை எளிதாக்கும் சேவை
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபர் குடும்பம், நான்கு வருட தேடலுக்கு பிறகு எலைட் மேட்ரிமொனியிடம் வந்தது. “எங்கள் குடும்பம் 20 வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் தான் இருக்கிறோம். மணப்பெண் தேடி வருகிறோம். நன்கு படித்தவராக இருந்தால் போதாது, அந்த பெண் திறமையாகவும், லட்சியத்துடனும், தனித்துவமாக இருக்க வேண்டும். குடும்பத்தை வழி நடத்திச் செல்ல கலாச்சாரத்தை பின்பற்றும் குணத்துடன், எங்களுடைய குடும்பத்தை புரிந்துக்கொள்ளும் நபரை எதிர்பார்க்கிறோம்” என கோரிக்கை வைத்தனர். இந்தியாவில் எலைட் குடும்பங்களின் அணுகுமுறை எப்படி இருக்குமோ, அதையே இவர்களின் எதிர்பார்ப்பும் பிரதிபலித்தது. முக்கிய பிரமுகர்களின் குடும்பங்கள், சொத்து மற்றும் பரம்பரையை மட்டுமே அடிப்படையாக கொண்டவை அல்ல. குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை, அவர்களின் மதிப்பு, எந்த நேரத்திலும் உறுதுணையாக இருக்கும் பண்பு ஆகியவற்றை விரும்புகின்றனர். இது தான் திருமணத்துக்கான அடித்தளமாகவும் பார்க்கப்படுகிறது. எலைட் குடும்பங்களின் எதிர்பார்ப்பு இதுதான்
“பல கோடி சொத்துக்கு அதிபதியாக விளங்கும் நபர்கள் எங்களிடம் வரும் போது, அவர்களின் அந்தஸ்த்துக்கு நிகரான துணையை தேடுவது மட்டும் அவர்களின் நோக்கம் இல்லை. அவர்களின் வாழ்க்கைமுறை, மதிப்பு போன்ற குணங்களோடு ஒத்து வரும் ஒருவரை கண்டுபிடிப்பது தான் உண்மையிலேயே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது”“இதை விட முக்கியமாக குடும்பத்தில் போட்டி உணர்வு இல்லாமல் ஒற்றுமையை உறுதி செய்யும் குணங்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறது”, என மூத்த துணை தலைவரும் எலைட் வணிகத் தலைவருமான ஹரிஷ் ஜனார்த்தனன் தெரிவித்தார். 17 ஆண்டுகளுக்கு மேலான சிறந்த சேவை
வரன் பார்ப்பதில் 17 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள எலைட் மேட்ரிமொனி ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவின் வணிக குடும்பங்கள் அந்தஸ்தை மட்டுமே அடிப்படையாக வைப்பது இல்லை. தொழில் முனைவோர் சிந்தனையுடன், வணிக நடைமுறைகள் தெரிந்த நபராக, உலகளாவிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் வரன் இருக்க வேண்டுமென கேட்கிறனர். எலைட் மேட்ரிமொனி மூலம் திருமணமானவர்கள்
கன்னியாகுமரியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தன் 24 வயது மகனுக்கு சீக்கிரமே வரன் தேட ஆரம்பிக்கிறார். குடும்ப தொழிலை வழிநடத்தி, பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் மணப்பெண் வேண்டும் என்பது தான் அவரின் ஒரே விருப்பம். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தின் விருப்பமும் இதுவாகவே தான் இருந்தது. அவர்களின் எண்ணத்தை சரியாக புரிந்துக் கொண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வைத்தது எலைட் மேட்ரிமொனி. இவர்களை ஒன்றிணைத்த போது, இரண்டு குடும்பத்துக்கும் பிடித்து விட்டது. இதில் மணப்பெண் ஒரு கோரிக்கை வைத்தார். தன் படிப்பை முடித்த பிறகும், பரதநாட்டிய கலைஞராக அரங்கேற்றத்தை நடத்திய பிறகு திருமணம் செய்ய கேட்டார். மணமகன் குடும்பமும் அதை முழு மனதாக ஏற்றுக் கொண்டனர். அதற்காக மணமகனும் சென்னைக்கே சென்று தன் வருங்கால துணையை ஊக்கப்படுத்தியுள்ளார். இது தான் இன்றைய எலைட் குடும்பங்களின் முன்னேறிய சிந்தனையாக இருக்கிறது. எலைட் மேட்ரிமொனியின் ஸ்பெஷல் அணுகுமுறை
எலைட் மேட்ரிமொனியின் அணுகுமுறை இது போன்ற செல்வ செழிப்புள்ள குடும்பங்களின் உண்மையான எதிர்பார்ப்புகளை புரிந்துக்கொள்ள அர்ப்பணிப்புள்ள ரிலேஷன்ஷிப் மேனேஜர்களை கொண்டுள்ளது. எலைட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மூத்த ரிலேஷன்ஷிப் மேனேஜர் நியமிக்கப்படுவார். இதன் மூலம் அவர்களின் விருப்பங்களை புரிந்துக்கொண்டு சரியான நபரை தேர்ந்தெடுக்க உதவி செய்ய முடிகிறது. குறிப்பாக ஆலோசனைகள் அனைத்தும் குடும்பத்தை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்கள் வரனிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். வரனுடைய வணிக மதிப்புகள், தொழில் வளர்ச்சி விருப்பங்கள் போன்றவற்றை தெரிந்துக்கொள்ள இது உதவுகிறது. எலைட் மேட்ரிமொனியின் சுவாரசிய நிகழ்வு
இயற்கையாக தயாரிக்கப்படும் மை மட்டுமே பயன்படுத்தி அச்சு தொழில் நடத்தி வரும் குடும்பத்துடன் பணிபுரிய ஒரு முறை எலைட் மேட்ரிமொனிக்கு வாய்ப்பு கிடைத்தது. மணமகள் சைவமாக இருக்க வேண்டும் என மணமகன் வீட்டார் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வும், நேர்மையான செயல்பாடுகளும் தொழில்முறை தெரிந்த நபர் வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். அதே போன்ற குடும்பத்தை தேர்ந்தெடுத்து கொடுத்தது எலைட் மேட்ரிமொனி. ஒரே சந்திப்பில் இருவருக்கும் பிடித்துவிட்டது, திருமணமும் நடந்து முடிந்தது. மணமகன், மணமகளுக்கு மட்டுமே பிடித்துப்போவதை தாண்டி குடும்பங்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதையும் எலைட் மேட்ரிமொனி உறுதிசெய்கிறது. பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்களுடைய பகுதிக்குள்ளேயே, அதாவது ஒரே சமூகத்தில் தான் வரனை தேடுகின்றனர். ஆனால் எலைட் மேட்ரிமொனி நெட்வர்க் மூலம் மற்ற பகுதிகளில் இருந்து வெவ்வேறு கலாச்சாரத்தில் வாழும் மக்களையும் ஒன்றிணைக்க முடிகிறது. பல்வேறு வரன்களின் விவரங்கள் கிடைக்கும் போது அதை ஆராய்ந்து அவர்கள் தகுதியுடையவர்களா என சரிபார்க்க எலைட் குடும்பங்களால் நேரம் செலவிட முடிவதில்லை. மக்களுக்கு தெரியாமல், வெளியே தகவல் கசிந்துவிடாமல், சரியான அணுகுமுறையோடு வரன் தேடுவது தான் எலைட் மேட்ரிமொனிக்கான மிகப்பெரிய சவால். அதை மிக கச்சிதமாக செய்து வருகிறது. விஐபிக்கள் விரும்பும் சிறந்த சேவை
எலைட் மேட்ரிமோனி எலைட் குடும்பங்களில் வெறும் திருமணங்களை மட்டும் நடத்தவில்லை. இரு குடும்பங்களின் தொழிலும், அடுத்த தலைமுறைக்கான பாரம்பரியத்தை கடந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலைட் மேட்ரிமொனியின் நோக்கமே இதுதான். சிறந்த துணை, சரியான துணை, காலம் கடந்தும் இரு குடும்பங்களின் ஒற்றுமை நிலைத்து நிற்கவே வரன்களும் அமைத்து தரப்படுகிறது என்கிறார் ஹரிஷ். விஐபி, செல்வந்தர்களுக்கு உயர்தர சேவைகளும் வழங்கும் எலைட்
எலைட் மேட்ரிமொனி சிறந்த மேட்ச்மேக்கிங் சேவைகளை பிரத்யேகமாக வழங்கி வருகிறது. விவரங்களை பொது வெளியில் வெளியிடாமல், பாதுகாப்போடு செயல்படுகிறது. இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக செயல்படுகிறது. 17 ஆண்டு அனுபவத்தோடு கிட்டத்தட்ட 500 ரிலேஷன்ஷிப் மேலாளர்களுடன் செயல்படும் எலைட் மேட்ரிமொனி இந்தியாவின் மிகப்பெரிய எலைட் குடும்பங்களின் டேட்டாபேஸ்-ஐ வைத்துள்ளது.இது பற்றி மேலும் தகவல் அறிய www.elitematrimony.com என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். அல்லது 91-93639 77777 என்ற எண்ணில் அழைக்கவும்