உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிட்கோ திறன்மிகு மையங்கள் ஒரு லட்சம் பேர் பயன்

டிட்கோ திறன்மிகு மையங்கள் ஒரு லட்சம் பேர் பயன்

சென்னை:தமிழக அரசின் 'டிட்கோ' நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புக்கு உதவும் வகையிலான மூன்று மேம்பட்ட திறன்மிகு மையங்களால், இதுவரை 1 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.தமிழக அரசின் 'டிட்கோ' எனப்படும் தொழில் வளர்ச்சி நிறுவனம், உலகளவில் பெரிய நிறுவனங்களான 'டசால்ட் சிஸ்டம்ஸ், ஜி.ஏ.ஏவியேஷன், சீமென்ஸ்' நிறுவனங்களுடன் இணைந்து, சென்னை தரமணி டைடல் பார்க் வளாகத்தில், மூன்று திறன்மிகு மையங்களை, 600 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, 'டேன்கேம்' எனப்படும் தமிழக மேம்பட்ட உற்பத்திக்கான மையம், 210 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இது, 2022 ஜூனில் செயல்பாட்டிற்கு வந்தது. அங்கு, வான்வெளி மற்றும் ராணுவ துறை, மின்னணு வாகனங்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள். 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை, '3டி' எனப்படும் முப்பரிமாணம் வாயிலாக, தங்களின் தயாரிப்புக்கு தேவையான தொழில்நுட்பம், வணிக மேம்பாட்டு உத்திகளை மேற்கொள்ள முடியும். சீமென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 'டேன்சம்' எனப்படும் தமிழக நுண்திறன் மற்றும் மேம்பட்ட உற்பத்திக்கான மையம், 250 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டுள்ளது. 'டாம்கோ' எனப்படும் தமிழக மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம், ஜி.இ., ஏவியேஷன் நிறுவனத்துடன் இணைந்து, 140 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 'டேன்சம்' மையத்தில், 81,000, 'டேன்கேம்' மையத்தில், 24,000, 'டேம்கோ' மையத்தில், 1,000 என, 1.06 லட்சம் பேர் பயன்அடைந்துள்ளனர். இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'டிட்கோவின் மூன்று திறன்மிகு மையங்களும் இளைஞர்களுக்கு டிஜிட்டல் மற்றும் தொழில் துறைக்கு தேவைப்படும் திறன்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் வழங்குகிறது; 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மட்டும், 70,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை