உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகம் முழுதும் டி.என்.பி.எல்., சிமென்ட் விற்பனை

தமிழகம் முழுதும் டி.என்.பி.எல்., சிமென்ட் விற்பனை

சென்னை:காகித உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டி.என்.பி.எல்., நிறுவனம், தமிழகம் முழுதும் சிமென்ட் விற்பனையை அதிகரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது. தமிழக அரசின் டி.என்.பி.எல்., எனப்படும் தமிழக செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு, கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் ஆண்டுக்கு, 4 லட்சம் டன் அச்சு மற்றும் எழுது காகிதம் உற்பத்தி செய்யும் திறன் உடைய ஆலை உள்ளது. இந்நிறுவனம், காகித தயாரிப்பின் போது உருவாகும் திட கழிவுகளான சுண்ணாம்பு சேற்றையும், எரிசாம்பலையும் பயன்படுத்தி சிமென்ட் உற்பத்தி செய்கிறது. இதற்காக, கரூரில் உள்ள காகித ஆலை வளாகத்தில் ஆண்டுக்கு, 2.97 லட்சம் டன் உற்பத்தித்திறன் உடைய சிமென்ட் ஆலை உள்ளது. அங்கு உற்பத்தி செய் யப்படும் சிமென்ட், எட்டு மாவட்டங்களில் விற்கப்படுகிறது. தற்போது, மாநிலம் முழுதும் சிமென்ட் விற்பனையை அதிகரிக்கும் பணியில், டி.என்.பி.எல்., ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை