உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

பாகிஸ்தானில் இருந்து வெளியேற பிராக்டர் அண்டு கேம்பிள் முடிவு பா கிஸ்தானில் வணிக செயல்பாடுகளை நிறுத்துவதாக நுகர்பொருள் தயாரிப்பாளரான  பிராக்டர் அண்டு கேம்பிள் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சின்சினாட்டியை சேர்ந்த இந்நிறுவனம், டைடு டிடர்ஜென்ட் உட்பட பல்வேறு நுகர்பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது.தேவை சரிந்ததுடன், லாபம் குறைவால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை காரணமாக கூறி, முன்னர் வெளியேறிய ஷெல், பிபைஷர் நிறுவனங்களின் வரிசையில், பிராக்டர் அண்டு கேம்பிளும் இணைந்துள்ளது. இந்திய சிப் உற்பத்தி திறன் டாடாவுடன் குவால்காம் பேச்சு இந்தியாவின் சிப் உற்பத்தி திறனை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக டாடா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேசி வருவதாக, அமெரிக்காவை சேர்ந்த குவால்காம் சிப் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆகாஷ் பால்கிவாலா தெரிவித்து உள்ளார். நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், 'உலகளாவிய நிறுவனங்கள் உற்பத்தி ஆலையை பரவலாக்கி வருகின்றன. சரியான நேரத்தில் இந்தியாவும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. இதனை, வாடிக்கையாளர்களுக்கு சாத்தியமான பாதையில் எடுத்து செல்வதே எங்கள் பணி' என தெரிவித்தார். 2,500 ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிநீக்கம் செய்கிறதா டி.சி.எஸ்? ம ஹாராஷ்டிராவின் புனே கிளையில் பணிபுரி யும், 2,500 ஊழியர்களை வலுக்கட்டாயமாக பணியில் இருந்து நீக்க டி.சி.எஸ்., நிறுவனம் முயற்சித்து வருவதாக, நாசென்ட் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. இதில் தலையிட்டு மஹாராஷ்டிரா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. இதனிடையே, திறன் மறுசீரமைப்பு காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் பாதிக்கப்படுவர் என டி.சி.எஸ்., நிறுவனம் விளக்கமளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி