உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

செப்., காலாண்டில் எப்.எம்.சி.ஜி.,விற்பனை வளர்ச்சி குறைவு ஜி .எஸ்.டி., மாற்றங்கள் காரணமாக, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், நுகர்பொருட்கள் விற்பனை வளர்ச்சி விகிதம் 5.4 சதவீதமாக குறைந்த போதிலும், மதிப்பின் அடிப்படையில், 12.90 சதவீதம் உயர்வு கண்டு இருப்பதாக தரவு ஆராய்ச்சி நிறுவனமான நீல்சன் ஐ.க்யூ., வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில், கிராமப்புற சந்தை நுகர்பொருட்கள் விற்பனை வளர்ச்சி 7.7 சதவீதமாக குறைந்த போதிலும், நகர்ப்புற சந்தையை விட தொடர்ச்சியாக ஏழாவது மாதமாக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜெய்ப்பூர் கல்வி நிறுவனத்தை வாங்க பிளாக்ஸ்டோன் பேச்சு அ மெரிக்காவைச் சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான 'பிளாக்ஸ்டோன்', ஜெய்ப்பூரை சேர்ந்த குளோப் ட்ரோட்டர்ஸ் எஜுகேஷனல் இன்னோவென்சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்க பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'ஜெய்ஸ்ரீ பெரிவால்' என்ற பெயரில், சர்வதேச பள்ளியை குளோப் ட்ரோட்டர்ஸ் நடத்தி வருகிறது. பிளாக்ஸ்டோன் நிறுவனம், கையகப்படுத்தல் உள்ளிட்டவை சேர்த்து, இந்தியாவில் புதிய கல்வி தளத்தை உருவாக்க, 5,317 முதல் 6,203 கோடி ரூபாைய முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. யு.பி.ஐ., வாயிலாக கடன் தனியார் வங்கிகள் ஆயத்தம் நீ ண்ட காத்திருப்புக்கு பின்னர், ஆக்ஸிஸ் வங்கி, எச்.டி.எப்.சி.,வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய தனியார் துறை வங்கிகள், யு.பி.ஐ., வாயிலாக கடன் வழங்கும் சேவையை துவங்க உள்ளன. கடந்த 2023 செப்டம்பரில் துவங்கப்பட்ட யு.பி.ஐ., சேவையை, 2 ஆண்டுகள் பெரிதாக வங்கிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது நவி, சூப்பர்மனி போன்ற நிதி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து, கடன் திட்டங்களை வழங்க தனியார் வங்கிகள் ஆயத்தமாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ