உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வர்த்தக துளிகள்

 வர்த்தக துளிகள்

ஹார்மன் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோ பெ ங்களூரை தலைமையிடமாக கொண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, சாம்சங் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹார்மனின் டிஜிட்டல் டிரான்ஸ்பர்மேஷன் சொல்யூஷன்ஸ் வணிகத்தை, 3,270 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது. கடந்த ஆக.21ம் தேதி, ஹார்மனின் 100 சதவீத பங்குகளை வாங்க, விப்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது. இந்நிறுவனத்தில் பணிபுரிந்த 5,600 பேர், விப்ரோ பணியாளர்களாக தொடர்கின்றனர். ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதலை தொடர்ந்து, தற்போது கையகப்படுத்தல் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக விப்ரோ தெரிவித்துள்ளது. சோலார் வேபர் தயாரிப்புவெப்சோல் - லின்டோன் ஒப்பந்தம் இ ந்தியாவில் சோலார் செல்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருளான போட்டோவோல்டைக் இங்காட் மற்றும் வேபர் தயாரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த சோலார் செல் தயாரிப்பாளரான வெப்சோல் எனர்ஜி, அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த லின்டோன் கிரிஸ்டல் டெக்னாலஜீஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, லின்டோன் நிறுவனம், வேபர் தயாரிப்புக்கான இயந்திரத்தை, வெப்சோல் நிறுவனத்துக்கு வினியோகிக்க உள்ளது. 'நெடுஞ்சாலை பயணத்தில் அலெர்ட்ஜியோ - என்.எச்.ஏ.ஐ., ஒப்பந்தம் புதுடில்லி,: நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமான என்.எச்.ஏ.ஐ., ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு, தானியங்கி அமைப்பானது, ஆபத்தான வளைவுகள், கால்நடைகள் நடமாடும் பகுதி மற்றும் மூடுபனி படர்ந்த பகுதிகள், விபத்து, வெள்ளம் போன்றவற்றால் தற்காலிக போக்குவரத்து மாற்றம் ஆகியவை குறித்து எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் வாயிலாக முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்