உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேகமாக ரெடியாகிறது திருச்சி டைடல் பார்க்

வேகமாக ரெடியாகிறது திருச்சி டைடல் பார்க்

சென்னை:திருச்சியில் ஐ.டி., வேலைவாய்ப்பை உருவாக்க, டைடல் பார்க் நிறுவனம், 415 கோடி ரூபாய் செலவில், டைடல் பார்க் கட்ட உள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில், ஆறு லட்சம் சதுர அடியில், ஆறு தளங்களுடன் கூடிய டைடல் பார்க் கட்டப்பட உள்ளது. இங்கு தொழில் துவங்கும் நிறுவனங்களால், 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, சமீபத்தில் 'டெண்டர்' கோரப்பட்டது. தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. மேலும் கட்டுமானத்துக்காக தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையிடம், அனுமதி கேட்கப்பட்டு உள்ளது.

துாத்துக்குடி டைடல் பார்க் 29ல் முதல்வர் திறக்கிறார்

துாத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில், 32 கோடி ரூபாயில், 63,100 சதுர அடியில், நான்கு தளங்களுடன் மினி டைடல் பார்க் கட்டப்பட்டு உள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் வரும், 29ம் தேதி துவக்கி வைக்க உள்ளார். துாத்துக்குடி டைடல் பார்க் திறப்பதற்கு முன்பாகவே, அதில் உள்ள அனைத்து அலுவலக இடங்களையும் இரு நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ