உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உஜ்ஜீவன் வங்கியின் யுனிவர்சல் பேங்கிங் விண்ணப்பம் நிராகரிப்பு

 உஜ்ஜீவன் வங்கியின் யுனிவர்சல் பேங்கிங் விண்ணப்பம் நிராகரிப்பு

புதுடில்லி: 'உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ்' வங்கியின் 'யுனிவர்சல் பேங்கிங்' உரிமத்துக்கான விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதை தெரிவித்துள்ள உஜ்ஜீவன் வங்கி, தனது கடன் தொகுப்பை பன்முகப்படுத்திய பின் மீண்டும் விண்ணப்பிக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. யுனிவர்சல் பேங்கிங் உரிமம் என்பது, குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே வழங்கும் கட்டுப்பாடின்றி, முழுமையான வங்கி சேவைகளை வழங்குவதற்கான உரிமம் ஆகும். யுனிவர்சல் வங்கி உரிமம் கிடைக்கும்பட்சத்தில், கட்டுப்பாடுகள் குறைவதுடன், பெரிய நிறுவனங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் முழுமையான முதலீட்டு வங்கி சேவைகளையும் தடையின்றி வழங்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ