உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவிப்பு

இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல் சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவிப்பு

வாஷிங்டன்:சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுடன் 'மிகப்பெரிய ஒப்பந்தம்' விரைவில் ஏற்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:எல்லாருமே ஏதாவது ஒப்பந்தம் ஏற்படுத்தவும் அதில் பங்கு வகிக்கவும் விரும்புகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு, உண்மையிலேயே யாருடைய நலனுக்காவது ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா எனக் கேட்டதை நினைவூட்டுகிறேன். தற்போது சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சிறந்த வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த ஒப்பந்தம் ஒன்று வரப்போகிறது, அது இந்தியாவுடனாக இருக்கலாம். அது மிகப் பெரியது. மற்ற எல்லா நாடுகளுடனும் தனித்தனி ஒப்பந்தம் ஏதும் ஏற்படுத்தப்படாது.மற்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் மட்டுமே அனுப்புவோம். அதில், 25, 35, 45 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.சீனாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாக டிரம்ப் கூறினாலும், அதுபற்றிய விபரம் எதையும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை