அமெரிக்க வரியால் ரூ.4 லட்சம் கோடி பாதிப்பு
புதுடில்லி:அமெரிக்காவின் 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பால், நான்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி பாதிப்பை இந்தியா சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்துள்ளதாவது: நாட்டின் நலனைப் பாதுகாப்பதோடு, விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள் உள்பட தொழில்துறையைச் சேர்ந்த அனைத்து பிரிவினரின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு, வரி விதிப்பின் தாக்கத்தை குறைக்க, ஏற்றுமதியை ஊக்குவிப்பதோடு, மாற்றுச் சந்தை உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.