உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வொர்க்டே ரூ.220 கோடி முதலீடு; அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

வொர்க்டே ரூ.220 கோடி முதலீடு; அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

சென்னை; மனிதவள மேம்பாட்டு துறையைச் சேர்ந்த அமெரிக்க நிறுவனம் 'வொர்க்டே!' 'பார்ச்சூன் 500' நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், சென்னையில் 220 கோடி ரூபாய் முதலீட்டில், உலகளாவிய திறன் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமை செயலகத்தில், தொழில் துறை அமைச்சர் ராஜா முன்னிலையில், வழிகாட்டி நிறுவனம் மற்றும் வொர்க்டே இடையில் நேற்று கையெழுத்தானது. இதன் வாயிலாக இந்நிறுவனம், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் உலகளாவிய செயல்பாடுகளை மேற்கொள்ளும். இதனால், 3,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.இது குறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜா அறிக்கை:சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க வொர்க்டே முடிவு செய்திருப்பது, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமான தமிழகத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான உலகளாவிய மையமாக தமிழகம் மாறி வருகிறது. மேலும், உயர்தர வேலைவாய்ப்புகளையும் உறுதி செய்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !